செல்லா காசு

on Wednesday, February 9, 2011

வெளி நாட்டில் நானிருக்க
வீடு மட்டும் நினைவிருக்க
கூடுகட்டும் தாய் பறவை
குடியிருப்பது என் தோட்டத்திலே

பூ சிந்தும் விதை எச்சம்
தேன் சிந்தும் மகரந்தம்
நான் போட்ட வெளி மீது
நடந்து காட்டும் நாட்களாக

சருகாக மாறி போகும்
சரித்திரமாய் கூறி போகும்
புதைக்க வந்த மரணமின்று
புறப்பட்டது என் சடலமாக

வேதனையில் கண்ணீர் சிந்தி
வீடெல்லாம் மொழுகி விட்டு
பாளி விதை படித்துறையில்
பாடி வந்தேன் சடங்கன்று

பணம் தேடும் வாழ்கை அன்று
பிணமாக மாறியது இன்று
நினைவு நாளை செலவழிக்க
நான் சேர்த்த காசு செல்லா காசு

0 comments:

Post a Comment